திண்டிவனம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பார்வையாளராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து செல்லும் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்ததூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர் நவீன்குமார் தந்தை பெயர் மாயகிருஷ்ணன் டாக்டர் அம்பேத்கர் தெரு பனையூர் இவர் செஸ்போர்ட்டில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
அதன் பேரில் மாணவர் தமிழக அளவில் நடக்க உள்ள செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டார் மேலும் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டு நாள் பார்வையளராக பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட நவீன் குமாரை ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சீதாபதி சொக்கலிங்கம், மாணவன் நவீன் குமாருக்கு சால்வை அணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மேலும், ஓலக்கூர் வட்டார அலுவலர்கள் ஆக்ஸிலியம் பெலிக்ஸ், சுபத்ரா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியர் ஆதவன், ஒலக்கூர் காவல் நிலைய தனி பிரிவு அதிகாரி கோவிந்தராஜ் பொறியாளர் செந்தில், ஆகியோர் மாணவன் நவீன் குமாரை வெகுவாக பாராட்டி மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment