ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 July 2022

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்தஆர்ப்பாட்டத்திற்கு காமராஜ் தலைமை தாங்கினார். ஏகாம்பரம், கிருஷ்ணசாமி, இராமமூர்த்தி, நமச்சிவாயம்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். RK.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். தியாகராஜன் ஒருங்கிணைப்பாளர் தொடக்க உரையாற்றினார். 


இதில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைந்திட வேண்டும், 70 வயதான ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், 3 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. 


இதில் செல்வராஜ், வீனைதீர்த்தான், மரியதாஸ், கோவிந்தராஜன், சண்முகசுந்தரம், ஆகியோர் கோரிக்களை முன்மொழிந்தனர். புருஷோத்தமன் சிறப்புரை ஆற்றினார். 


இராமதாஸ், இராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், தண்டபாணி , ஜீவேந்திரன் மாவட்ட தலைவர் தலைமை ஆசிரியர் சங்கம். வெங்கடேசன் மாவட்ட தலைவர், மற்றும் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாநிலம் தழுவிய கமல ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுபால் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad