விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளதான் பேரில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக இணையதள முகவரி https://www.cra.tn.gov.in மற்றும் விழுப்புரம் மாவட்ட https://Villupuram.nice.in ஆகிய ஏதேனும் ஒரு முகவரிக்கு பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள் 07/11/22/மாலை 5.45. மணி வரை தபால் மூலமாக அல்லது நேரிலோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இப்பணி நியமனத்திற்கான காலிபணியிட விவரங்கள் இட ஒதுக்கீடு விபரங்கள் மற்றும் ஏனைய தகுதிகள் தொடர்பான விரிவான அறிக்கையினை விழுப்புரம் மாவட்ட இணையதளத்திலும் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் செய்யப்பட்டுள்ள பிரசுரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் என திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment