மாணவர்களுக்கான கல்வி உதவி ஊக்கத் தொகையில் ஊழல் செய்த கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

மாணவர்களுக்கான கல்வி உதவி ஊக்கத் தொகையில் ஊழல் செய்த கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயின்ற SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவி ஊக்கத் தொகையில் ஊழல் செய்த கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் திருவெண்ணைநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் அனைத்து சமூக மாணவர்களும் பயின்று வருகின்றனர். அரசு வழங்கும் கல்வி உதவி தொகை வருடாந்திரம் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.


இதில் குறிப்பா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கடந்த 2016 முதல் 2020 வரை அரசு வழங்கும் கல்வி உதவி ஊக்கத்தொகை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களிடம் வங்கி புத்தகத்தை வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை வழங்காமல் வரவில்லை என்று வருடாந்திரம் கூறி வருகின்ற நிலையில் கல்லூரி முதல்வர் அவர்களின் அரசியலின் அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு வேண்டிய மாற்று நபர்களுடைய வங்கி கணக்கு புத்தகத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளார் இதனை அறிந்த புரட்சி பாரதம் கட்சி நேரடியாக மாணவர்களிடம் ஆய்வு செய்து பிறகு இன்று 17.11 2022 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மனு அளித்தோம்  மனுவை பெற்ற நேர்முக உதவியாளர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னதாக ஆதிதிராவிட நலதுறை அதிகாரி அவர்கள் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் உடனடியாக விசாரணை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பூவை ஆறு  விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு  உளுந்தூர்பேட்டை தொகுதி செயலாளர் கே ஏழுமலை விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி  முன்னாள் அமைப்பாளர் கோபிநாதன் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய முன்னாள் இளைஞர் இணை செயலாளர் தர்மா திருவெண்ணெய்நல்லூர் நகர அமைப்பாளர் பெத்தீஸ்வரன் இவர்களுடன் கோவிந்தன் சுரேஷ் ஐயப்பன் கோபி லோகு ஆகியோர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad