ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் வட்டார வள மையம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முருகப்பாக்கம் பாகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டு போட்டிகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு. சங்கர், முன்னிலை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் அக்ஸிலியம் பெலிக்ஸ், அவர்கள் தலைமையில்ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீமுல்லை, வரவேற்றார். இவ்விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாற்றத்திறன் மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாற்று திறன் மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்றுநர் அருணா நன்றியுரை வங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர், பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், இயன் முறை மருத்துவர், மைய ஆசிரியர் அனைவரும் சிறப்பாக செய்தனர்.

No comments:
Post a Comment