திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி தாளாளர்கள், உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கினார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில், பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் வாகனங்களில் முன் மற்றும் பின்பக்கம் சிசிடிவி கேமரா பொருத்தி, பேருந்தின் உள்ளே சிசிடிவி காட்சிகளை மாணவர்கள் பார்க்கும் வகையில் எல்இடி பொருத்த வேண்டும். பேருந்துகளில் ஓட்டுநருடன் மாணவ, மாணவிகளை ஏற்றி இறக்க உதவியாளர் இருக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களை பின்னோக்கி இயக்க எதுவாக சென்சார் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர்கள், உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment