திண்டிவனம் புனித பிலோமினாள் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது இவ்விழாவில் 180 திருக்குறளை ஒப்புவித்த மூன்றாம் வகுப்பு மாணவிக்கு திண்டிவனம் சப் கலெக்டர் கட்ட ரவி தேஜா புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.

ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் 500 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 50 ,100 ,200 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இதே போல் 1330 திருக்குறள் 13 . 39 வினாடிகளில் ஒப்புவித்த சாதனை மாணவிகளான சத்யா சாதனா அவளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆசிரியர் பயிற்றுனர் பள்ளியின் தாளாளர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
No comments:
Post a Comment