முன்னூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

முன்னூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா.

photo_2022-11-21_23-03-11

தேசிய நூலக வார விழாவினையொட்டி முன்னூர் கிளை நூலகத்தில் அமெரிக்காவில் வசிக்கும் திரு அரவிந்தன் கண்ணையன் அவர்கள் ரூபாய் 10,000 செலுத்தி கொடையாளராக இணைந்தார். திரு.ஜீவா செல்லக்கண்ணு திரு.திருவள்ளுவன் கலை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலர்களாக இணைந்தனர்.

நூலக வார விழாவை ஒட்டி டேனியல் அம்மையார் அவர்கள் 6000 ரூபாய் மதிப்பிலான சோலார் மின்விளக்கு சாதனத்தை முன்னூர் கிளை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார். கொடையாளர்,புரவலர் சேர்க்கைக்கான பணம் மற்றும் சோலார் மின்விளக்கு சாதனங்கள் மாவட்ட நூலக அலுவலர் திருமதி பால சரஸ்வதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு முன்னூர் கிளை நூலகத்தின் பொறுப்பு நூலகர் ராஜேஷ் தீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.


thagadur%20kural

உடன் மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் திரு காசிம், திரு.செழியன்,  திரு வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிதி ஆண்டில் மட்டும் முன்னூர் கிளை நூலகத்தில் 93 பேர் புரவலர்களாக இணைந்திருக்கிறார்கள். இரண்டு பேர் 5000 ரூபாய் செலுத்தி பெரும் புரவலர்களாக இணைந்திருக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு எம். எம்.அப்துல்லா அவர்களும் பெரும் புரவலர்களில் ஒருவர். நூலகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.


இலவச கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு சொந்தமான காலி மனையில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சொந்த கட்டிடம் கட்டித் தர மக்களவை உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad