திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திண்டிவனம் மான்போர்ட் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவியர்களை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதா, தமிழரசி, ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள் சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தினர். திண்டிவனம் அனைத்து மகளிர்காவல் நிலைய தலைமை காவலர்கள் உமாதேவி, பூங்கொடி, விமலா, மற்றும் முதல் நிலைக் காவலர் ஆதிலட்சுமி, உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment