விழுப்புரம், பெரிய முதலியார் சாவடி அருகே காவல்துறையினர் நடத்திய கஞ்சா வேட்டையில், 1 கிலோ 370 கிராம் எடை அளவு கொண்ட கஞ்சா பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் மித்ரன் அவர்களின் மேற்பார்வையில், திவான் நகர் அருகே ஆய்வாளர் ராபின்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சத்தியானந்தம் மற்றும் காவலர்கள் தலைமையில், அப்பகுதிக்கு சென்று சோதனை செய்ததில், ஸ்டீபன் ராஜ், ஆனந்த குமார் ஆகியோரின் வீட்டில் இருந்து சுமார் 1.370 kg கஞ்சா எலக்ட்ரானிக் வெயிட் மிஷின், கஞ்சா அடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment