விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை.


மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட (46) வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்றும்  மேலும் வரவேற்பாளர் பணி குறித்த அறிவுரைகள் வழங்கினார்.


காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வரும் பொது மக்களிடம் பணிவுடன், கணிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் புகார் தெரிவிக்க வரும் புகார்தாரரை அன்போடு வரவேற்று அவரது இருக்கையில் அமரச் செய்து அதன் பின் அவர்களது குறைகளை கேட்டறிய வேண்டும்.


புகார் மனுவை பெற்று பதிவேட்டில் பதிந்து நிலைய பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது காயம் ஏதும் ஏற்பட்டு இருந்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவர அறிவுறுத்த வேண்டும் எனவும். மேலும் மருத்துவமனையிலேயே புகார்கள் பெறப்படும் எனவும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.


சைபர் குற்றங்கள் பற்றிய புகார்களுக்கு பொதுமக்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த 1930 மற்றும் இணையதள சேவை cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் மேலும் இவ்வாறு புகார் தெரிவிக்க இயலாத நபர்களுக்கு தங்களது தொலைபேசியில் இருந்து புகார்களை தெரிவிக்கும் படியும் மேலும் புகார் மணு எழுத தெரியவில்லை என்றால் அவரது குறைகளை கேட்டறிந்து அவர்கள் சொல்லும் நடையிலேயே புகார் மனுக்கள் எழுதி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


கூட்டத்தின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தேவராஜ் மற்றும் திரு. கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.  


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

No comments:

Post a Comment

Post Top Ad