37 வது மாநில அளவிலான தமிழ்நாடு மூத்தோர் தடகள போட்டி கடந்த 17 ம் தேதி சேலத்தில் நடைபெற்றது, இதில் விழுப்புரம் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் முத்துக்குமரன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் ஸ்ரீதர் காவலர் பிரகாஷ் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்த ஆசிரியர் திருமதி. ஹேமலதா மற்றும் சின்னப்பராஜ் ஆகியோர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீச்சல் போட்டி, இறகு பந்து, வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் ஒட்டுமொத்த பதக்கங்களையும் வென்றனர்.

இதேபோல் கடந்த 18ஆம் தேதி மாநில விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு பாளையங்கோட்டை SDAT மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல் துறையைச் சார்ந்த டிஎஸ்பி கனகராஜ், ஆய்வாளர் முத்துக்குமரன், தலைமை காவலர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கு கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா அவர்கள் நேரில் அழைத்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment