மயிலம் வட்டாரத்தில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

மயிலம் வட்டாரத்தில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.


மயிலம் ஊராட்சி ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் நடைபெற்ற வளைகாப்பு விழா நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட திட்ட அலுவலர் அன்பழகி தலைமை தாங்கினார். 


மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜென்சி வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு நிளங்கு வைத்து, சீர்வரிசை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அமைச்சர் பேசுகையில் - ஏழை, எளிய பெண்கள் இந்த சமுதாய வளைகாப்பு மூலம் மனநிறைவைப் பெற்று, தாங்கள் குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பெற்றெடுத்து சமுதாயத்தில் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் எனவும், பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் எனவும் பேசினார். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், ஒன்றிய செயலாளர்கள்  மணிமாறன், தழுதாளி செழியன், மற்றும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad