தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களின் ஆலோசனைக்கிணங்க, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி ஒன்றியம், மூங்கில்பட்டு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக ரூ.3,21,000 மதிப்பிலான சிமெண்ட் சாலை பணிகளை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்தார்.

ஒன்றிய குழு தலைவர் சங்கிதாஅரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெய.ரவிதுரை, ஜெ.ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்தூரி பாண்டியன், மகேஸ்வரி பாஸ்கரன், செந்தில்குமார், அன்பரசி நீதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், வட்டார பொறியாளர்கள் இளையராஜா, கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், சீனுவாசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட வேளாண்மை கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராஜன், மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment