குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் வளைகாப்பு விழா எம்.எல்.ஏ பங்கேற்பு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் வளைகாப்பு விழா எம்.எல்.ஏ பங்கேற்பு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி ஒன்றியம் சார்பில், நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் சமூக வளைகாப்பு விழாவில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி  எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார். 

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், ஒன்றிய குழு தலைவர் சங்கிதாஅரசி ரவிதுரை, பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோ சித்ரா, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெ.ஜெயபால், நகர செயலாளர் நயினா முகமது, பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபுஜீவானந்தம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஹரிஹரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பல.அன்பரசு, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.  


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

No comments:

Post a Comment

Post Top Ad