விழுப்புரம் மாவட்டம், ரோசணை காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, அவர்கள் ரோசணை காவல் நிலையத்தைதிடீர் ஆய்வு செய்து காவல் நிலையத்தையும் பதிவேடுகளையும் நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது என வாழ்த்தி கிரேடு1 முதல்நிலைக் காவலர் 660 சுபாஷ், அவர்களுக்கு வெகுமதி 5000 ரூபாய் வழங்கியும் பொதுமக்களிடமும் குற்றவாளிகளிடமும் எவ்வாறு நடந்து கொள்வது விசாரணை பற்றியும் செல்போனில் ஏமாற்றுவதை எப்படி கண்டுபிடிப்பது என அறிவுரை வழங்கினார்.

காவல் ஆளுநர்களுக்கு குறை ஏதும் உள்ளதா என கேட்டு அறிந்தார், உடன்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா திண்டிவனம் ASP அபிஷேக் குப்தா, ரோசனை காவல் ஆய்வாளர் அன்னக்கொடி, உதவி ஆய்வாளர் தமிழ்மணி, சின்னசாமி, செல்வதுரை, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சுகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆனந்த நாதன், பலராமன் மற்றும் ரோசனை போலீசார் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment