விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் தலைமையில் மாண்டஸ் புயலினால் சாலையில் விழுந்த மரங்களை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியினை இன்று பார்வையிட்டு, பணியினை துரிதப்படுத்தினார்.
உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ம.ஜெயச்சந்திரன், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீ.நாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.கட்டா ரவி தேஜா உட்பட பலர் உள்ளனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment