விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில், நடைபெற உள்ள அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் தலைமையில், இன்று நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.கட்டா ரவி தேஜா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


No comments:
Post a Comment