நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பாண்டிச்சேரி காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க சாம்ராஜ், தலைமை தாங்கினார். திண்டிவனம் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்னை சஞ்சீவி, வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட எல்.சி. ஐ.எஃப். ஒருங்கிணைப்பாளர் கே.டி. ஆர். வேல்முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் ,மாவட்ட தலைவர்கள் கார்த்திக், கருணாகரன், ஓவியர் தேவ், ராஜேந்திரன், முரளிதரன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டிவனம் லயன்ஸ் சங்க செயலாளர் சிவகுமார் பாண்டிச்சேரி காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க செயலாளர் பழனி சேவை அறிக்கை வாசித்தனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம், சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் துணை ஆளுநர் சுபாஷ் சந்திர போஸ் வாழ்த்துரை வழங்கினார். பாண்டிச்சேரி காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, ராஜ்குமார், திண்டிவனம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சித்தார்த்தன், கணேசன், முகமதுரசின், நிஜாமுதீன், சக்தி, பழனி, முருகன், துரைமுருகன், வடிவேலு, பாலமுருகன், பன்னீர்செல்வம், குணசேகர், லோகநாதன், உட்பட திண்டிவனம் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி காஸ்மோபாலிடென் லைன்ஸ் சங்கம், கடலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம், கடலூர் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் லைன்ஸ் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அரிமா சங்க பொருளாளர் ராகவேந்திரா ராமமூர்த்தி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment