விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பாண்டிச்சேரி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜபாண்டி அவர்களின் மேற்பார்வையில், விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி. கீதா, காவலர்கள் சிவகுமார் மற்றும் பாண்டியன் ஆகியோர் தலைமையில், கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத்தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த டாட்டா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்ததில்.

அதில் பாண்டிச்சேரியில் இருந்து சேலத்திற்கு சுமார் 50 பெட்டிகள் கொண்ட பாண்டிச்சேரி மதுபானங்கள் எடுத்துச்செல்வது தெரியவர இதன் எதிரிகள் மற்றும் காரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மணிவாளன், கள்ளக்குறிச்சி, முருகேசன் சேலம் மாவட்டம் என விசாரணையில் தெரியவந்தது.
மேற்கண்ட நபரிடம் இருந்து 600 பாட்டில் பாண்டிச்சேரி மதுபானங்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment