முண்டியம்பாக்கம் ரயில்வே கேட்டில் மின்சார லைனில் சிக்கிய லாரியை விரைந்து சென்று பெரும் ஆபத்தை முறியடித்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறையினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

முண்டியம்பாக்கம் ரயில்வே கேட்டில் மின்சார லைனில் சிக்கிய லாரியை விரைந்து சென்று பெரும் ஆபத்தை முறியடித்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறையினர்.


விழுப்புரம், ரயில்வே மின்சார லைனில் சிக்கிய லாரி. பெரும் ஆபத்தை முறியடித்த காவல் துறை முண்டியம்பாக்கம் ரயில்வே கேட்டில் விபத்துக்குள்ளாகி லாரி மின்சார லைனில் சிக்கிய தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா  அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து விரைந்து சென்று விபத்தை தவிர்த்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவலர்கள் முண்டியம்பாக்கம் to ஒரத்தூர் சாலை ரயில்வே கேட்டில் சாலமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்த கனரக ஜல்லி வாகனம் ரயில்வே கேட்டில் இடித்து விபத்து ஏற்பட்டு.

ரயில்வே EB லைனில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த லாரி ஓட்டுனர் தகவல் அறிந்து உடனடியாக விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் உதவி ஆய்வாளர் திரு.குமார ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஹரி விநாயகம்,  தலைமை காவலர்கள் லோகநாதன், சுரேஷ் மற்றும் மகேந்திரன். தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரயில்வே சீனியர் செக்சன் இன்ஜினீயர் அஜய் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக EB லைனில் மின்சாரத்தை நிறுத்தி லாரி ஓட்டுனரை மீட்டனர்.


மேற்கண்ட விபத்து 25000 KV சப்ளை உள்ள உயர் மின் அழுத்தம் கொண்ட கம்பம் ஆகும். பொதுமக்கள் மற்றும் ஓட்டுனருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பின் தடை செய்யப்பட்ட போக்குவரத்து சீர் செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்ட காவல் துறையினர். பொது மக்களின் பாராட்டுகள் மற்றும் நன் மதிப்பை பெற்றனர்.  


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

No comments:

Post a Comment

Post Top Ad