விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.சித்ரா விஜயன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உட்பட பலர் உள்ளனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment