தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சேலம் மாநில பிரிதிநித்துவ பேரவையின் அறை கூவல் தீர்மானத்தின் படி திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அனைத்து அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 35 நபர்கள் கலந்து கொண்டு அகவிலைப்படி வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம் திட்டம் அமுல்படுத்த வேண்டும், கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை செயலாளர் திரு, விமல் ராஜ், மாவட்ட இணை செயலாளர் திரு, சித்தார்த்தன், கிராம நிர்வாக முன்னேற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு. செல்வகுமார், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment