திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா.
திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டிவனம் அரிமா சங்கம் இணைந்து கிறிஸ்துமஸ் தினவிழா மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் உயர்திரு. K.தேவராஜ், அவர்கள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அரிமா KDR. வேல்முருகன்M.A.,அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் திருமதி. அருள்மொழி M.A.M.Sc.B.Ed., வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் திரு. Ln.பிரான்சிஸ், அவர்கள் கலந்து கொண்டு பாடலுடன் ஜெபமும் நடத்தி கிறிஸ்துமஸ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் அரிமாசங்க தலைவர் அன்னை திரு.Ln. சஞ்சீவி, செயலாளர் திரு. Ln.சிவக்குமார், பொருளாளர் திரு.Ln.ராகவேந்திரா ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் திரு. வழக்கறிஞர்
Ln.கார்த்திக் கருணாகரன், திரு.ஓவியர்Ln. தேவ், திரு.Ln.கிரிதர
பிரசாத், திரு. Ln.முரளிதரன், உறுப்பினர் திரு. Ln.துரைமுருகன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் வசந்தி, காயத்ரி, சந்திரா, பவித்ரா, திவ்யா, பரமேஸ்வரி மேரிநிர்மலா ஜாய்ஸ், அபிராமி விஜயலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு ஆராதனை பாடல்பாடினர் ஆங்கில ஆசிரியை திருமதி. R.ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment