திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம். கடலூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டம், பெருங்கோட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு. R.R.K.செந்தில், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர்கள் பிரிவு நகரத் தலைவர் ANNA. கணேஷ், மாவட்ட துணைத் தலைவர் தெய்வமணி, மாவட்டச் செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் லெனின், மேதாவி, ரவி, சரவணன், கோமதி, செந்தாமரை கண்ணன், மணிகண்டன், உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் வழக்கறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment