ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் கலைத் திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த 6 முதல் 12 வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கு இன்று (06.12.2022) காலை 10:30 மணி அளவில் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி (St Ann's Hr Sec School) கூட்ட அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம் அவர்களும், திண்டிவனம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிமொழி அவர்களும் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள் .
ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ஆக்சிலியம் பெலிக்ஸ் அவர்களும், புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்பணி ஜான் பாஸ்கோ அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஒலக்கூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அனைத்து அரசு பள்ளி (மேல்நிலை,உயர்நிலை, நடுநிலை) தலைமை ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் வட சிறுவலூர் நடுநிலைப்பள்ளி 28 புள்ளிகள் பெற்று முதலிடமும், கீழ்மாவலங்கை நடுநிலைப்பள்ளி 19 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், கோனேரி குப்பம் நடுநிலைப்பள்ளி 14 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தன.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், சாரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி 39 புள்ளிகள் பெற்று முதலிடமும், வெள்ளி மேடு பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி 21 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், ஒலக்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி 17 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தன.
முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருதும் சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளன.இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்பட்டன. மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகள் 3 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் ஒலக்கூர் ஒன்றியத்தில் மட்டுமே இரண்டு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தேசிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாதிரி இப்பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டன. பெண் கல்வியின் முக்கியத்துவத்திற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு 10 பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது அதில் ஒலக்கூர் ஒன்றியத்தில் மூன்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
வட சிறுவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழ்மாவிலங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்று பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக ஆசிரியர் பயிற்றுநர் சுந்தரமூர்த்தி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment