விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைப் பணியை துவக்கம். அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 December 2022

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைப் பணியை துவக்கம். அமைச்சர் பங்கேற்பு.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து இந்த ஆண்டிற்கான அரவை  பருவத்திற்கு கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார் இயக்குனர் முத்து மீனாட்சி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர்கள் மணிக்கண்ணு, மற்றும் புகழேந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில் முதல் 8ம் தேதி நாள் ஒன்றுக்கு 3000 ஆயிரம் டன் அரவை செய்து 28-04-2023 தேதிக்குள் 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டிற்கான அரவை தொடங்கப்பட்டுள்ளது,


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் ஜெயச்சந்திரன், சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு தலைவர் ராமலிங்கம், ஒன்றிய குழு பெரும் தலைவர் ஓம்சிவசக்திவேல், துணை பெரும் தலைவர் கோமதிநிர்மல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக், நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், துணை தலைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், ஒன்றிய பிரதிநிதி பழனி, விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க தலைவர் ரகோத்தமன், கரும்பு விவசாயிகள் ஆலை தொழிலாளர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad