மறைந்த முன்னாள் முதலமைச்சர் Dr. ஜெயலலிதாவின் 6- ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அ.தி.மு.க.O.P.S. அணி சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் M.P.யுமான செஞ்சி சேவல் ஏழுமலை, தலைமையில் திண்டிவனம் நேருவீதியில் அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்
பொது மக்களுக்கு அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார்கள் உடன் விழுப்புரம் மாவட்ட கழக அவை தலைவர் ஏந்தூர் நடராஜன் திண்டிவனம் நகர கழக செயலாளர் M.தம்பி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் லூர்து, சேவியர், S.P., கஜேந்திரன், துரை, லட்சுமிபதி, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், மற்றும் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment