விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடிய ஆறு பேரை போலீசார் கைது செய்து 11 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு, அந்திலி பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடு போவதாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவலகண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சித்ரா, உதவி ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களை தேடிய நிலையில் ஆலம்பாடி தணிக்கலாம்பட்டு கூட்ரோடு அருகே ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர்களை கவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்
மணிகண்டன், சரவணன், மாணிக்கம், ஆனந்தன், அன்பரசு, தங்க பாண்டியன். ஆகியோர்களிடமிருந்து 2 Pulsar, 9 splender என 11 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment