சாலையோர தள்ளுவண்டி கடைகளை தள்ளு தள்ளு என தள்ளி கொண்டு சென்ற சாலை போக்குவரத்தை சரி செய்த போக்குவரத்து போலீசார்கள் - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 March 2023

சாலையோர தள்ளுவண்டி கடைகளை தள்ளு தள்ளு என தள்ளி கொண்டு சென்ற சாலை போக்குவரத்தை சரி செய்த போக்குவரத்து போலீசார்கள்


சாலையோர  தள்ளுவண்டி கடைகளை தள்ளு தள்ளு என தள்ளி கொண்டு சென்ற சாலை போக்குவரத்தை சரி செய்த போக்குவரத்து போலீசார்கள்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள்  செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்தில் செல்லும் சாலை விபத்துகளும் அதிக அளவில் ஏற்பட்டன இதனை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தள்ளு வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டன. 


தொடர்ந்து சாலை ஓரத்திலேயே தள்ளுவண்டி உணவுகள் செயல்பட்டு வந்ததால் இன்று அதிரடியாக விழுப்புரம் போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அதிரடியாக தள்ளு வண்டியை தள்ளு தள்ளு என கூறியவாறு தள்ளி சென்று ஓரமாக விட்டனர். போக்குவரத்து போலீசார் தள்ளு வண்டியை தள்ளு தள்ளு என தள்ளி சென்று ஓரமாக விட்ட சம்பவம் சற்று சலசலப்பையும் நகைச்சுவையும் ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad