விக்கிரவாண்டியில்ரூ.17, 34,000 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகத்தை அமைச்சர் "க.பொன்முடி" திறந்து வைத்தார். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

விக்கிரவாண்டியில்ரூ.17, 34,000 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகத்தை அமைச்சர் "க.பொன்முடி" திறந்து வைத்தார்.

விக்கிரவாண்டி தொகுதி கஞ்சனூர் ஊராட்சியில், பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.17, 34,000 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, காணை ஊராட்சி ஒன்றியம்,  கஞ்சனூர் ஊராட்சி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.17,34,000 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகத்தை   மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் திறந்து வைத்தார். 

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி , மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு V.இராஜா, மாவட்ட கவுன்சிலர் R.முருகன், RP.முருகன், ஒன்றிய குழு துணை தலைவர் வீரராகவன், பொதுக்குழு உறுப்பினர் காடுவெட்டி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,காணை மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள் சக்கரவர்த்தி,ரவிச்சந்திரன், நாராயணசாமி, அமிர்தலிங்கம், ஏர்ப்பன்,சந்தி, சிவராமன்,பாலமுருகன், காணை தெற்கு  ஒன்றிய கழக நிர்வாகிகள் M.பழனி,  K.சிவகுமார்,S.செல்வம், சிவகுமார்,மதன், செல்வராஜ், கருணாகரன், புனித அய்யனார், காணை வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்  நடராஜன், ஏழுமலை, அன்பழகன், சுப்பராயன், சரவணன், சுப்பிரமணியன், ஆனந்த், பாரதி நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.   - விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:

Post a Comment

Post Top Ad