தமிழகம் முழுவதும் 2500 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கவுள்ள நிலையில் கோவில் நிர்வாகிகளை அமைச்சர் அரசு பேருந்து மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதியிலுள்ள திருக்கோவில்கள் திருப்பணி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2500 கோவில்களுக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்கள் முன்னிலையில் வழங்க உள்ளார்.
காசோலை பெறுவதற்காக அந்தந்த கோவில் நிர்வாகிகள் திண்டிவனத்திலிருந்து அரசு பேருந்து மூலம் சென்னைக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment