விழுப்புரம் மாவட்ட சிவசக்தி பம்பை, உடுக்கை, சிலம்பு நலச்சங்க கலைஞர்கள் ஊர்வலம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

விழுப்புரம் மாவட்ட சிவசக்தி பம்பை, உடுக்கை, சிலம்பு நலச்சங்க கலைஞர்கள் ஊர்வலம்.


திண்டிவனத்தில் சிவசக்தி பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் நலச்சங்க 4-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் மண்ணாங்கட்டி,  தலைமை தாங்கினார் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் மாநில தலைவர் சத்யராஜ், சட்ட ஆலோசகர் தணபால், திமுக மாவட்ட பொருளாளர் ராமணன், சமூக சேவகர் செந்தில்குமார், கௌரவத் தலைவர்கள் காளியப்பன், ரவிச்சந்திரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக திண்டிவனம் இரயில் அடி விநாயகர் கோவில் துவங்கி திண்டிவனம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்கள் சிவன் பார்வதி, அம்மன், வேடம் அணிந்தும் பம்பை சிலம்பு உடுக்கை  அடித்தும் ஆடி பாடி சென்றனர். ஊர்வலம் செஞ்சி ரோடு மயிலம் முருகன் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது ஊர்வலத்தில் சிவசக்தி பம்பை உடுக்கை நல சங்க நிர்வாகிகள் துணைத் தலைவர்  பெருமாள், செயலாளர்  சரவணன், துணை செயலாளர் ரவிக்குமார், மற்றும் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச் சங்க நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட சிவசக்தி பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் விழா குழுவினர்கள் என  ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad