விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கிலி குப்பம் ஊராட்சி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழையூர் ஊராட்சி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்கொளப்பாக்கம் ஊராட்சி மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொளசூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர் முகாம் 05.01.2023 அன்று நடைபெறவுள்ளது.
இம்முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, ஆண்மை நீக்கம், தாது உப்புக்கலவை வழங்குதல், மலடு நீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்படவுள்ளது. மேலும், கால்நடை மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு கால்நடைகளை வளர்ப்பது குறித்தும், பராமரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment