விழுப்புரம் தமிழ்நாடு மாநில வாணிப கழக இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான கிடங்கு முன்பு இன்று விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைத்த மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மார்க் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டம் இண்டான்குளம் பள்ளத்தூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளர் அர்ஜுனன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணியின் பொழுது மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி ஈடுபட்டனர் அப்பொழுது அவர் பெட்ரோல் குண்டு வீசியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அர்ஜுனன் உயிரிழந்தார்.
பெட்ரோல் குண்டு வீசிய நபரை கைது செய்ய வேண்டும் அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் அரசு இழப்பீடு தொகையாக ரூபாய் 50 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும் மேலும் டாஸ்மார்க் விற்பனையாளர் பணியாளர் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் மாநிலத் துணைச் செயலாளர் K.சிவக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்டத் தலைவர் கணேஷ் மற்றும் மாவட்டச் செயலாளர் ராமஜெயம் மற்றும் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட அமைப்புச் செயலாளர் சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்
No comments:
Post a Comment