விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முதலாக மாபெரும் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் அரங்குகள் அமைப்பதற்கான கால் கோல் நடும் விழா விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி அவர்கள் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 25.03.2023 முதல் 05.04.2023 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.
புத்தகத்திருவிழாவில், 100 எண்ணிக்கையிலான புத்தக அரங்குகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேடை, எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் மேடை அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், பாரம்பரிய உணவு அரங்கம் ஏற்படுத்துவதற்கான கால் கோல் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் ச.தமிழ்செல்வி பிரபு, கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சச்சிதானந்தம், நகர்மன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜ பூபதி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்மன்ற உறுப்பினர் மணவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment