விழுப்புரம் எம் ஜி சாலையிலுள்ள ஜோதி விருட்சம் கடையில் நேற்று இப்ராஹீம் ராஜா என்பவரை ராஜசேகர், வல்லரசு என்ற இளைஞர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இப்ராஹீமை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலைக்கு காரணமான இரு இளைஞர்களை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். கொலையாளிகள் கஞ்சா போதையில் செய்ததாக சமூக வலைதளங்கள் பரவி வந்தன. இதனை மாவட்ட காவல்துறை இல்லை என்று விளக்கம் அளித்தனர். .
இச்சம்பவம் காரணமாக வணிகர் சங்கத்தினர் இன்று கடையடைப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வணிகர் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். மேலும் கொலை சம்பவத்தை கண்டித்து நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவ இடத்தில் ஏ.டி. எஸ்.பி., டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
No comments:
Post a Comment