பிறகு அவர் வங்கி மேலாளர் இடம் எனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனை சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் காசாளர் வராததால் வங்கி மேலாளர் அவர்கள் முகேஷ் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும்போது அவரது எண்ணானது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..

பின்பு வங்கி மேலாளர் அவர்கள் வேறு ஒருவரை காசாளராக பார்க்கும் படி கூறிய போது லாக்கரில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. பிறகு வங்கியின் சிசிடிவி காட்சியினை பார்க்கும் பொழுது முகேஷ் பணத்தை அவரது பையில் எடுத்து வைத்துக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த வங்கி மேலாளர் அவர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மற்றும் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா அவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்..இதனை முதற்கட்ட விசாரணையாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து முகேஷ் ஐ தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment