விழுப்புரம் நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம் பொதுமக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படும் - அமைச்சர் க.பொன்முடி - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2023

விழுப்புரம் நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம் பொதுமக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படும் - அமைச்சர் க.பொன்முடி


உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு மற்றும் EB காலணி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இன்று (28.04.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நகராட்சிகள் அனைத்திலும் அடிப்படை கட்டமைப்புகள் உயர் தொழில்நுட்ப வசதிகளோடும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.


அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263/- கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 165.686 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதித்தல், 7018 எண்ணிக்கையிலான பழுது நீக்குவதற்கான நுழைவு தொட்டி, 3 எண்ணிக்கையிலான பிரதான கழிவு நீரேற்று நிலையம், 7 எண்ணிக்கையிலான கழிவுநீர் உந்து நிலையம், 7 எண்ணிக்கையிலான கழிவுநீர் உந்து மனித ஆள்நுழைவு தொட்டி, 17 எண்ணிக்கையிலான பம்ப் ஹவுஸ், 17.90 கி.மீ நீளத்திற்கு பம்பிங் மெயின், 14,150 வீட்டு இணைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சிக்குள்ளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். 


மேலும், விழுப்புரம் நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றுள்ளதால், நகராட்சிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நகராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றியமையாததாக உள்ளதால், அனைவரின் ஒத்துழைப்போடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து, விழுப்புரம், அண்ணாமலை பல்கலைக்கழக இடைநிலை விரிவாக்க கல்வி மையத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தமிழ்நாட்டில், வரவிருக்கின்ற கல்வியாண்டில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.


ஆய்வின்போது, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.அன்பழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad