உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார்கள், அந்த வகையில் சுகாதாரத் துறையில் "மக்களை தேடி மருத்துவம்", "நம்மை காப்போம்", "48 இன்னுயிர் காப்போம்" மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டில் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்கள் இது மட்டுமில்லாமல் மருத்துவமனைக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்கள்..

விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் செலவில் நோயாளிகள் உடன் வருவோர் காத்திருக்கும் அறை மற்றும் 15 லட்சம் செலவில் ஆண்கள் மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கழிவறை திறந்து வைத்தார்.
உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி, ஊராட்சி குழு தலைவர் திரு.ம.ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி சித்ரா விஜயன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி. கீதாஞ்சலி உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment