கைதான இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் செய்து இருந்ததாகவும், ஆனால், போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மணல் கடத்தல் புகார் தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்ததால், வி.ஏ.ஓ. கொலை வழக்கை அவர்கள் விசாரித்தால் சரியாக இருக்காது என பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், அந்த வழக்கை மற்றொரு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷை நியமனம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது..
இதனை கண்டிக்கும் விதமாக இன்று விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரில் விஏஓ படுகொலையை கண்டித்து மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment