விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VET காலேஜ், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டிவனம் St.ஆணிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மயிலம், சத்தியமங்கலம் ஸ்ரீரங்க பூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ் எஸ் கல்லூரி பொம்மையார் பாளையம், திருச்சிற்றம்பலம் அரசு கல்லூரி மற்றும் திருவெண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வை மாணவ மாணவிகளுக்கு இடையே ஏற்படுத்தினர்.
மேலும் தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகித்தல் போன்ற குற்றங்கள் நடைபெறுமே ஆனால் (73581 56100 - drugsfreevpm@gmail.com) மேற்கண்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment