02.05.2023 இன்று சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக விழுப்புரம் அரசு மருத்துவமனையுடன் இனைந்து புற்று நோய் விழிப்புணர்வு ஊர்தி வரவழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பழனி மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில்

மருத்துவர் திரு.ஹேம்நாத் (Excutive vice chairman) அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும் புற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
மேலும் விழிப்புணர்வு வாகனத்தில் பதாகைகள் மற்றும் புற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகள் எடுத்துரைத்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..
No comments:
Post a Comment