விபத்தில் உயிரிழந்த நபருக்கு ரூ.28,62,888 இழப்பீடு வழங்காத அரசு பேருந்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 September 2023

விபத்தில் உயிரிழந்த நபருக்கு ரூ.28,62,888 இழப்பீடு வழங்காத அரசு பேருந்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி.

விழுப்புரம் மாவட்டம் ஆவிபுதுார் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் நாகராஜன்,27; லாரி டிரைவர். இவர், கடந்த 2018 ம் ஆண்டு ஜன., 21ம் தேதி   தனது நண்பர் ஜெயபாலை அழைத்து கொண்டு இருசக்கர வாகனம் மூலம் வடமருதுாரில் இருந்து புதுார் நோக்கி சென்றார்.



வாகனத்தை நாகராஜன் ஓட்டி சென்றார். எல்ராம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வந்த திருக்கோவிலுார் – மடப்பட்டு நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பேருந்து திடீரென இவர்கள் இருசக்கனம் மீது மோதியது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார், காயமடைந்த ஜெயபால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஜெயபால் உறவினர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

 
இந்நிலையில், விபத்து நஷ்டஈடு கோரி, இறந்தவரின் தந்தை குப்புசாமி, தாய் சாந்தி, மகள் சித்ரா ஆகியோர் விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், கடந்த 2020ம் ஆண்டு பிப். 27 ம் தேதி, சிறப்பு நீதிபதி ராமகிருஷ்ணன், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் விபத்து நஷ்டஈடாக ரூ.22,92,000 7.5 சதவீதம் வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.


இந்த தொகையை வழங்காததால், குப்புசாமி கடந்த 2021ம் ஆண்டு செப்., 8 ம் தேதி விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதன் பேரில், சிறப்பு நீதிபதி வெங்கடேசன், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் வட்டியோடு சேர்த்து ரூ.28,62,888 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


விபத்து நஷ்டஈடு தொகையை வழங்காததால் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 5ம் தேதி நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இன்று  விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த புதுச்சேரி அரசு பேருந்தை, வழக்கறிஞர்கள் கல்பட்டு ராஜா, தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அமீனா ராஜீவ்காந்தி, உதவியாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad