அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 September 2023

அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது

விழுப்புரத்தில் அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாநில தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் முத்துராமச்சந்திரன், மொத்த மருந்து வணிகப்பிரிவு தலைவர் ராகவேந்திரன், மக்கள் தொடர்பு மருந்து வணிகப்பிரிவு மற்றும் மருந்து ஆளுனர் சங்கத் தலைவர் சத்தியசீலன், அமைப்புச் செயலாளர் குறிஞ்சி வளவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட தலைவர் சின்னைய்யா தலைமை வகித்தார். பொதுக்குழு கூட்டத்திற்க்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் செல்வன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்தகத்தில் ரிஜிஸ்டார் சரிவர பராமரிக்காத காரணத்திற்க்காக குற்ற வழக்கு பதிந்து நீதிமன்றத்திற்க்கு செல்வதை விட, இதற்க்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்து நடைமுறையை கொண்டு வரவேண்டும். மருந்து வணிகர்கள் அனைவரும் சிறு குறு தொழில் முனைவோர்களாக இணைய வேண்டும். 


அதேபோல் வணிக நல வாரியத்தில் உள்ள காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். நிபா வைரஸிற்க்கு மருந்துகளை சட்ட முறைப்படி மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அதேபோல் தூக்க மாத்திரை, மனநல மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகள் போன்றவற்றை இளைஞர் சமுதாயத்தினர் தவறாக பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு உள்ளாவதாகவும் அதை தடுக்கும் பொருட்டு மருந்து வணிகர்கள் தமிழக அரசுக்கும், பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு நல்ல ஆரோக்கியமான சமுதாயமாக மாற்றிட சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க வரவு செலவு கணக்குகளை செளந்தர்ராஜன் தாக்கல் செய்தார்.


நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் அன்பழகன் நன்றியுரை ஆற்றினார். இதில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad