தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் இதுனால் வரை நிரப்பப்படாமல் உள்ளது- இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என டான்ஜெட்கோ எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வலியுறுத்தல் - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 24 September 2023

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் இதுனால் வரை நிரப்பப்படாமல் உள்ளது- இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என டான்ஜெட்கோ எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வலியுறுத்தல்

டான்ஜெட்கோ எம்பிளாயீஸ் யூனியன் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு இன்றைய வாரியத்தின் நிலைமை குறித்து சிறப்புரையாற்றினார்.


பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன், கூறுகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்ட காலமாக சுமார் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் இதுனால் வரை நிரப்பப்படாமல் உள்ளது, இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு நான்கு மாத காலம் ஆகியும் தொழிலாளர்களுக்கு மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை வாரியம் காலம் கடத்தி வருவதாகவும் வாரியா நிர்வாகம் உடனடியாக தொழிலாளர்களுக்கு முதல் தவணை நிலுவை தொகையினை வணங்கிட வேண்டும், 5387 நபர்கள் காத்திருப்போர் பட்டியல் வைத்து இதுனால் வரை நியமன உத்தரவு வழங்கப்படாமல் உள்ளது அவர்களுக்கு விரைவில் நியமன உத்தரவை வழங்கிட வேண்டுமெனவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு அவர்கள் பணி ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.


இந்த கூட்டத்தில் சங்கப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் தயாளன் அமைப்புச் செயலாளர் பாண்டியன், துணை தலைவர் குமார் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad