இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 September 2023

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு கோரி, கடந்த 1987-ஆம் ஆண்டு செப்.17-இல் மருத்துவர் ச.ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். 


இவர்களின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்.17-ஆம் தேதி மாவீரர்கள் வீரவணக்க நாளாக பாமக, வன்னியர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, 36-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் படங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடங்களுக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கூட்டேரிப்பட்டு அருகே சித்தனியில் உள்ள நினைவிடத்திலும், விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு, பனையபுரம், ஆகிய நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து, விழுப்புரம் அருகே கோலியனூரில் அமைந்துள்ள தொடர்ந்தனூர் வேலு, கோலியனூர் கோவிந்தன், விநாயகம் ஆகியோரது நினைவிடங்களில் அன்புமணி ராமதாஸ் மலர் அஞ்சலி செலுத்தினார். அவர்களது குடும்பத்தினருக்கு பொருளுதவியும் வழங்கினார். இந்த நிகச்சியில் வன்னியர் சங்கத் தலைவர் பூத்தா அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் பால சக்தி, மாநில துணைத்தலைவர் அன்புமணி மற்றும் மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் பாமக சிவகுமார், கோலியனூர் ஒன்றிய செயலாளர் ஞானவேல் பாமக கட்சி சேர்ந்த மணிமாறன் உள்ளிட்ட பல பாமகவினர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad