விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே திருமுண்டீஸ்வரம் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோயில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும்.
இறைவனின் காவலர்களான திண்டி,முண்டி வழிபட்ட தலம் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு பாடல்களில் இத்தலமும் ஒன்றாகும். இக்கோவில் கி.பி .943 ல் வெள்ளாங்குமரன் கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் தொன்மையை விளக்கும் செய்திகள் இக் கோவில் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் புகழ்பெற்ற கோவிலை காண்பதற்காக தமிழக ஆளுநர் அவர்கள் இன்று காலை 11.30 மணி அளவில் கோவிலுக்கு வந்தார்.
பின்பு செல்வாம்பிகை ஸ்ரீ சிவலோகநாதர் சாமியை வழிபட்டு பிரகாரத்தை சுற்றி வந்தார் .பிறகு கோவில் பழமை வாய்ந்த 1000 ஆண்டு கால 32 கல்வெட்டுகளை ஆய்வு செய்தார், இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையினரும் செய்தனர்.
No comments:
Post a Comment