விழுப்புரம் காகுப்பம் ஆயுதபடை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணிற்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல் ஹக் IPS., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாசங் சாய் IPS.,அவர்கள் தலைமையில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜோசப் அவர்களின் மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.முத்துகுமரன் அவர்களின் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழு 21 குண்டுகள் முழங்க காவல் பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment