இதன் பின் பேச்சுவார்த்தையின் பிறகு தயாரிப்பாளருக்கு 60% மற்றும் திரையரங்க உரிமையாளருக்கு 40% என முடிவிற்கு வந்தது., இதன் காலதாமதத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் பட டிக்கெட்டிற்காக அலைமோதி கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் திரைப்படம் வெளியாக கூடிய திரையரங்குகளில் டிஜிட்டல் பேனர்கள் அதிக அளவில் வைத்து ரசிகர்கள் உற்சாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஆனது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள கல்யாண் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் சிலர் விஜய் ரசிகர் மன்ற தலைவரிடம் டிக்கெட்டுகள் இருப்பதாக எண்ணி அவரிடம் 300 டிக்கெட்டுகளை இலவசமாக தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனால் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடன் கோலியனூர் ஒன்றிய தலைவர் விஜய் கோபு அவர்களின் தலைமையில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment